search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணப்பெண் மாயம்"

    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பார்வதிநாதன். இவரது மகள் ஜான்சி (வயது 22). இவர் தென்காசி அருகேயுள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும் கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி மயிலானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இன்று கடையத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் அவர்களது திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.

    திருமணத்திற்கு மணமகன் வீட்டார் இன்று காலை கடையத்துக்கு புறப்பட்டு நின்றனர். மணமகளை அலங்காரம் செய்வதற்காக உறவினர்கள் மணப்பெண்ணை கூப்பிட சென்றனர். அப்போது மணப்பெண் ஜான்சியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் திருமண வீட்டாரும், அங்கு வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வீடு களை இழந்தது. இது குறித்து கடையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜான்சி எங்கு சென்றார்? திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன புதுப்பெண் மணப்பாறையில் உள்ள தோழி வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். #EswaranMLA
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும், கோபி அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி. இவர்கள் 2 பேருக்கும் வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி சந்தியா, உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ள தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சந்தியா, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவருடைய தோழி வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மணப்பாறைக்கு விரைந்து சென்று சந்தியாவை மீட்டனர். விசாரணையின்போது சந்தியா கூறுகையில், ‘எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. எனவே, கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள எனது தோழி வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டனர்’ என்றார்.

    இதையடுத்து சந்தியாவை போலீசார் கோபி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாரதி பிரபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து சந்தியா தனது பெற்றோரிடம் சென்றார்.  #EswaranMLA
    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன புதுப்பெண் மணப்பாறையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். #EswaranMLA
    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் (வயது 43).

    இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது. உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காமல் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி அக்காள் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் மாயமாகி விட்டார்.

    திருமணம் செய்ய இருந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா ஜோடியாக எடுத்த படம்.

    மணப்பெண் திடீரென மாயமானதால் இருவர் வீட்டிலும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இது குறித்து மணப்பெண்ணின் தாய் தங்கமணி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் மகளை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார். இதையொட்டி கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணமகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மணமகள் சந்தியாவின் செல்போன் எண்ணை வைத்து செல்போன் டவர் மூலம் விசாரித்தபோது திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பதாக காட்டியது.

    இதனால் சந்தியா தனது ஆண் நண்பர் விக்னேசுடன் மணப்பாறையில் தங்கி இருப்பது தெரியவந்தது. எனவே கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் தனிப்படை போலீசார் மணப்பாறைக்கு விரைந்துள்ளனர். #EswaranMLA
    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனை மணக்க இருந்த மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #EswaranMLA
    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).

    இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும். ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. வரை படித்துள்ளார்.

    இதற்காக திருமணம் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மணமகள் வீட்டிலும் மற்றும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வும் அவரது உறவினர்களும் கடந்த ஒரு வாரமாக திருமண பத்திரிகையை கொடுத்து வந்தனர்.

    வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா திருமணம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நடக்க இருந்தது.

    அன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்தது.

    திருமணத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வதாக இருந்தது.

    திருமணத்துக்கு 9 நாட்களே இருந்த நிலையில் மணமக்கள் வீடு கோலாகலமாக இருந்தது. திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது.

    திருமண பத்திரிகையை படத்தில் காணலாம்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணமகள் சந்தியா தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். மணமகள் இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று வீட்டில் கேட்டபோது சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் என்று கூறி கொண்டு சென்றார்.

    ஆனால் மணமகள் சந்தியா அக்கா வீட்டுக்கு போகவில்லை மாயமாகி விட்டார். கடந்த 2 நாட்களாக சந்தியாவை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சந்தியாவின் தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் எனது மகள் அவளது அக்கா வீட்டுக்கு போய்வருவதாக கூறி கொண்டு சென்றவள் எங்கு சென்றாள்? என்று தெரியவில்லை. அவளை கண்டு பிடித்து தாருங்கள் என்று கூறி உள்ளார்.

    மாயமான மணமகள் சந்தியா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் பழகி வந்துள்ளார். அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடன்தான் சந்தியா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    சந்தியாவின் தாயார் அளித்த புகாரிலும் இதை தெரிவித்துள்ளார். தனது மகளுக்கும் விக்னேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.

    இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #EswaranMLA
    திருச்சி அருகே மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55), ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்.

    இவரது மகள் மோனிகா (21) . இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோனிகா மாயமானார்.

    இது குறித்து அவரது தந்தை பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோனிகா எங்கு சென்றார் , திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

    கடலூரில் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் உறவினரின் பெண்ணுக்கு வாலிபர் தாலிகட்டினார்.
    பண்ருட்டி:

    கடலூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 28), பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆசைமுத்து மகள் ரஞ்சிதம் (வயது 24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி இரு வீட்டார்களும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவந்தனர். இவர்களது திருமணம் இன்று கடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் மணமகள் ரஞ்சிதம் கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரஞ்சிதத்தை தேடினர். உறவினர் மற்றும் தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ரஞ்சிதத்தின் தந்தை ஆசைமுத்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சிதத்தை தேடினர். மணமகள் மாயமானதை அறிந்த மணமகன் அழகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று திருமணம் நடைபெற இருந்த கடலூர் தனியார் திருமண மண்டபத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். மாயமான மணமகள் ரஞ்சிதத்தை இன்று காலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அழகேசனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்துதர விருப்பமா? என மணமகனின் பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர் மகளும் அழகேசனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து புதுமணப்பெண்ணை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். அழகேசன் அந்த மணப்பெண்ணின் கழுத்தில் குறித்த முகூர்த்த நேரத்தில் தாலிகட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். திடீரென மணப்பெண்ணாக மாறிய பெண்ணை அனைவரும் பாராட்டினர். #Tamilnews
    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஜவுளி எடுக்க சென்ற மணப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை களக்காட்டை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் லதா (வயது23).

    இவருக்கும் அதே பாலமலை பகுதி திம்பம்பதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் தமிழரசன் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது.

    திருமணத்தையொட்டி புதிய ஜவுளி வாங்க இருவர் வீட்டாரும் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூருக்கு சென்றனர். அவர்களுடன் மணப்பெண் லதாவும் ஜவுளி எடுக்க சென்றார்.

    ஜவுளி கடையில் உறவினர்கள் தங்களுக்கு பிடித்த புதிய துணிகளை தேர்வு செய்து வாங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மணமகளை தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை. அவர்களுடன் வந்த புதுப்பெண் லதா திடீரென மாயமாகி விட்டார்.

    இதனால் உறவினர்களிடையே பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. கடை உள்ளேயும், வெளியேயும் ஓடி வந்து தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இது குறித்து புதுப்பெண்ணின் தந்தை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுப்பெண் லதாவை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு யாருடனும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் மாயமாகி விட்டாரா? என்ற பல்வேறு சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×